/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குடிநீருடன் கழிவு நீர்: ஐந்தாண்டு அவதி
/
குடிநீருடன் கழிவு நீர்: ஐந்தாண்டு அவதி
ADDED : அக் 25, 2024 05:38 AM
அவனியாபுரம்: ' மதுரை வில்லாபுரம் தென்றல் நகரில் குடிநீரில் கழிவுநீரும் கலந்து வருவதால் ஐந்தாண்டுகளாக அவதிப்படுவதாக' பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
மதுரை வில்லாபுரம் தென்றல் நகரில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மாநகராட்சி சார்பில் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
அப்பகுதியினர் கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளாக குடிநீருடன் கழிவு நீர் கலப்பதால் குடிநீர் கறுப்பு நிறத்தில் வருகிறது. அதில் புழுக்களும் வருவதால் தண்ணீரை பயன்படுத்த முடியாமல் தெருக்களில் கொட்டுகிறோம். இந்த தண்ணீரை பாத்திரம் கழுவ பயன்படுத்தினால் மலேரியா, வைரஸ் காய்ச்சலால் பலர் பாதிப்படைகிறோம். தனியார் லாரிகளில் குடம் ஒன்றுக்கு ரூ. 10 கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்துகிறோம். குடிநீர் பயன்படுத்தாமலேயே அதற்கென வரியும் மாநகராட்சிக்கு செலுத்துகிறோம்.
இது குறித்து கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இனிமேலும் யாரிடம் குறையை தெரிவிப்பது எனத் தெரியாமல் தவிக்கிறோம்' என்றனர்.

