/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பணிக்காலத்தில் நேரடி எஸ்.ஐ.,க்களுக்கு 'கானல் நீராகும்' பதவி உயர்வுகள்
/
பணிக்காலத்தில் நேரடி எஸ்.ஐ.,க்களுக்கு 'கானல் நீராகும்' பதவி உயர்வுகள்
பணிக்காலத்தில் நேரடி எஸ்.ஐ.,க்களுக்கு 'கானல் நீராகும்' பதவி உயர்வுகள்
பணிக்காலத்தில் நேரடி எஸ்.ஐ.,க்களுக்கு 'கானல் நீராகும்' பதவி உயர்வுகள்
ADDED : பிப் 08, 2024 06:32 AM
மதுரை, : தமிழக போலீஸ் துறையில் 1994, 1997, 1999ல் நேரடி எஸ்.ஐ.,க்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு எஸ்.பி., வரை பதவி உயர்வு பெற தகுதி, வாய்ப்பு இருந்தும் இதுவரை இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் பிற பதவிகளில் சேர்ந்தவர்கள் 4 பதவி உயர்வு வரை பெற்றுவிட்ட நிலையில், நேரடி எஸ்.ஐ.,க்களுக்கு அது 'கானல் நீராக' உள்ளது.
போலீஸ் துறையில் சட்டம் ஒழுங்கு பிரிவு, ஆயுதப்படை, பட்டாலியனுக்கு நேரடி எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சட்டம் ஒழுங்கு பிரிவில் ஆட்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் 'சீனியாரிட்டி' அடிப்படையில் பதவி உயர்வு கிடைப்பது 'குதிரை கொம்பாக' உள்ளது.
கடந்த 1994ல் நேரடி எஸ்.ஐ.,யாக சேர்ந்தவர்களுக்கு 2008ல்தான் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இருஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு டி.எஸ்.பி., பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். இதுவரை அளிக்கப்படவில்லை. இவர்களுக்கு பின் 1997, 1999ல் சேர்ந்தவர்களுக்கும் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில் கிரேடு 2 போலீசாக சேர்ந்தவர்கள் கிரேடு 1, ஏட்டு என அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்று இன்று சிறப்பு எஸ்.ஐ., வரை பதவி உயர்வு பெற்று விட்டனர். அதேபோல் டி.எஸ்.பி.,யாக சேர்ந்தவர்கள் பதவிஉயர்வு பெற்று இன்று டி.ஐ.ஜி.,யாகவும், ஐ.ஜி.,யாகவும் உள்ளனர்.
ஆனால் இவர்களுடன் நேரடி எஸ்.ஐ.,யாக சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு 'கானல் நீராக' உள்ளது. சிலர் பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். எஸ்.பி., வரை பதவி உயர்வு பெற தகுதி, வாய்ப்பு இருந்தும் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

