/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
120 நாட்களுக்கு பாசன கால்வாயில் நீர்
/
120 நாட்களுக்கு பாசன கால்வாயில் நீர்
ADDED : நவ 01, 2025 03:00 AM
மதுரை: காலதாமதமாக திறக்கப்பட்ட பாசனத்தண்ணீரை தொடர்ந்து 120 நாட்களுக்கு அனுமதிக்க வேண்டும் என வைகை திருமங்கலம் பிரதான விரிவாக்க பாசன கோட்டத்தலைவர் ராமன் தெரிவித்தார்.
உசிலம்பட்டி பகுதிகளின் 19 ஆயிரத்து 500 ஏக்கர் ஒருபோக நெல் பாசனத்திற்கு செப்., கடைசியில் தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஒரு மாதம் தாமதமாக நேற்று அணைப்பட்டியில் இருந்து மலைப்பகுதி வழியே விக்கிரமங்கலம் மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.
ராமர் கூறியதாவது: பிரதான விரிவாக்க பாசன கால்வாய் வழியாக விக்கிரமங்கலம் முதல் மறவன்பட்டி வரையான 33 கண்மாய்கள் மூலம் 19 ஆயிரத்து 500 ஏக்கர் பாசனம் பெறுகிறோம். செப். கடைசியில் தண்ணீரை எதிர்பார்த்த நிலையில் அக். 31ல் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 120 நாட்களுக்கு தண்ணீர் கிடைத்தால் மட்டுமே ஒருபோக நெல் சாகுபடி முழுமை பெறும் என்றார்.
பாசனத்தண்ணீர் திறப்பு விழாவில் எம்.எல்.ஏ., அய்யப்பன், நீர்வளத்துறை உதவி பொறியாளர் செல்லையா பங்கேற்றனர்

