/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு மருத்துவமனையில் அருவி 'டீன்' அலுவலக மாடியில் நீர்க்கசிவு
/
அரசு மருத்துவமனையில் அருவி 'டீன்' அலுவலக மாடியில் நீர்க்கசிவு
அரசு மருத்துவமனையில் அருவி 'டீன்' அலுவலக மாடியில் நீர்க்கசிவு
அரசு மருத்துவமனையில் அருவி 'டீன்' அலுவலக மாடியில் நீர்க்கசிவு
ADDED : டிச 14, 2024 06:55 AM

மதுரை : தொடர் மழையால் மதுரை அரசு மருத்துவமனை டீன் அலுவலக முதல் மாடியில் அறுவை சிகிச்சை வார்டு காரிடாரின் மேற்பகுதியில் நீர்க்கசிந்து தரையில் வழிந்தது.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கட்டடத்தின் முதல்மாடி உள்பகுதி மட்டுமின்றி காரிடார்களிலும் கட்டில்கள் போடப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இரண்டு நாட்களாக இடைவெளியின்றி பெய்த மழையால் காரிடார்களின் இணைப்பு பகுதி மேல் தளத்தில் தொடர்ந்து நீர் கசிந்தது.
ஆறாவது யூனிட் பகுதியில் நோயாளிகளின் கட்டில் அருகே மேலிருந்து சிற்றருவியாய் தண்ணீர் கொட்டியது. அதனை வார்டுக்குள் செல்லாமல் இருக்க, மருத்துவமனை பணியாளர்கள் பிளாஸ்டிக் வாளிகளில் பிடித்து கழிப்பறைக்குள் ஊற்றினர். துணை மருத்துவ கிடங்கு பகுதியிலும், மேலிருந்து தண்ணீர் கொட்டியது. நான்காவது யூனிட் பகுதியில் மேல்தள பக்கவாட்டு இரும்புத் துாணில் மழைநீர் கசிந்து துருப்பிடித்து காணப்படுகிறது.
அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதால் பெரும்பாலோனோர் இங்கு வருகின்றனர். காரிடார்களில் மழைநீர் கசிந்து கொண்டே இருந்ததால் முதல்மாடியின் தரைப்பகுதி முழுவதும் ஈரமாக இருந்தது.
நோயாளிகள் மட்டுமின்றி மருத்துவமனை பணியாளர்களும் நடந்து செல்லும் போது வழுக்கி விழ வாய்ப்பாக அமைந்து விடும் என்பதால் நீர்க்கசிவை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும்.

