ADDED : நவ 06, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் ஒரு போக பாசனத்திற்கு செப்.15ல் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. 45 நாட்கள் முடிவடைந்த நிலையில் தற்போது முறைவைத்து கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
ஏற்கனவே நிறுத்தப்பட்ட தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்படுவதால் தேவைப்படும் விவசாயிகள் தங்களுடைய நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்தி கொள்ளலாம் என நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் தெரிவித்தார்.
புலிப்பட்டியில் ஒரு விநாடிக்கு 440 கனஅடி வீதம் ஒருபோக பாசனத்திற்கு உரிய அளவு குறையாமல் தண்ணீரை திறக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.