நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: குழிசேவல் பட்டியில் பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. உடனே நீர் வளத்துறை செயற்பொறியாளர் ஜெயராமன் ஏற்பாட்டின் பேரில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து, தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

