/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அதிக தண்ணீரால் பொய்த்தது முதல் போகம் 2ம் போகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்
/
அதிக தண்ணீரால் பொய்த்தது முதல் போகம் 2ம் போகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்
அதிக தண்ணீரால் பொய்த்தது முதல் போகம் 2ம் போகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்
அதிக தண்ணீரால் பொய்த்தது முதல் போகம் 2ம் போகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்
ADDED : நவ 15, 2024 05:59 AM
மதுரை: பேரணை முதல் கள்ளந்திரி வரை இருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி பெரியாறு வைகை நீரினைப் பயன்படுத்துவோர் சங்கப் பிரதிநிதிகள், பாசன கோட்ட தலைவர்கள் நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாரதிதாசனிடம் மனு கொடுத்தனர்.
திட்டக்குழு உறுப்பினர்கள் காரணம், முருகன், பாசன கோட்டத் தலைவர்கள் பாஸ்கரன், அக்கினி, சுந்தர், ரதிமன்னன், ஜெகதீசன், பொன்ஜெயராம் கூறியதாவது:
கடந்த ஜூலையில் முதல் போகத்திற்கு தண்ணீர் கொடுத்ததால் பேரணை முதல் கள்ளந்திரி வரையான 44 ஆயிரத்து 500 ஏக்கருக்கு நெல் சாகுபடி முடிந்து விட்டது. வழக்கமாக ஏக்கருக்கு 30 - 40 நெல் மூடை அறுவடை செய்வோம். முதல் போகத்தில் அதிக மழை பெய்ததால் வயல்களில் தண்ணீர் தேங்கியது. நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்கியதால் நெற்பயிர்களில் கதிர்கள் இன்றி தாள் போல மாறியது. இதனால் ஏக்கருக்கு 20 - 22 மூடை நெல் கிடைத்து பாதியளவு நஷ்டப்பட்டோம். தற்போது 2ம் போகத்தை முழுதாக நம்பியுள்ளோம்.
மழையை காரணம் காட்டி 20 நாட்களாக தண்ணீரை அடைத்து வைத்துள்ளனர் நீர்வளத்துறை அதிகாரிகள். மழை பெய்ததால் நெற்கதிர்களை அறுக்க முடியாத சூழ்நிலையில் தண்ணீரை அடைத்ததை நாங்கள் கண்டுகொள்ளவில்லை.
இப்போது அறுவடை நேரம். 2ம் போகத்திற்கான நாற்று உற்பத்தியை தொடங்கி விட்டோம். இன்னும் ஒருவாரத்தில் நடவுப்பணி, நேரடி விதைப்புப் பணிகளைத் துவங்க உள்ளோம்.
டிசம்பர் வரை கனமழை இருக்கும். ஜன. 15 வரை பருவமழை இருக்கும் என்பதால் தாமதமின்றி தண்ணீரை திறக்க வேண்டும் என்றனர்.