ADDED : செப் 05, 2025 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாநகராட்சியில் வைகை இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குழாய்களில் இணைப்பு பணிகள் மேற்கொள்வதால் வைகை வடகரை, தென்கரை பகுதியில் 21 வார்டுகளில் செப்.,6,7 ல் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
(வார்டு எண்கள்: 27, 28, 29, 30, 31, 32, 33, 34 மற்றும் 67, 73, 75, 78, 79, 80, 81, 82, 83, 84, 86, 87, 93) அத்தியாவசியமான பகுதிகளில் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.