/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பழைய பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு
/
பழைய பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு
ADDED : நவ 20, 2024 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை ;: மதுரையின் பழைய பாசனத்திற்காக வைகையாற்றில் இன்று (நவ.20) தண்ணீர் திறக்கப்பட்டு நவ. 29 வரை விடப்படுகிறது.
பழைய ஆயக்கட்டு பகுதியான சோழவந்தானில் இருந்து நிலையூர் வாய்க்கால் வழியாக விரகனுார் வரையுள்ள மாடக்குளம், துவரிமான், கீழமாத்துார் உட்பட 46 கண்மாய்களுக்கு இதன் மூலம் தண்ணீர் கிடைக்கும்.
வினாடிக்கு 500 கனஅடி வீதம் தொடர்ந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவதால் 27 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு பயன்படும்.

