/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அணைகளை ஒட்டிய பூங்காக்களில் அருவி, 'ரோப்கார்' அமைக்கலாம் கேரளாவை பார்த்து சுற்றுலாத்துறை பழக வேண்டும்
/
அணைகளை ஒட்டிய பூங்காக்களில் அருவி, 'ரோப்கார்' அமைக்கலாம் கேரளாவை பார்த்து சுற்றுலாத்துறை பழக வேண்டும்
அணைகளை ஒட்டிய பூங்காக்களில் அருவி, 'ரோப்கார்' அமைக்கலாம் கேரளாவை பார்த்து சுற்றுலாத்துறை பழக வேண்டும்
அணைகளை ஒட்டிய பூங்காக்களில் அருவி, 'ரோப்கார்' அமைக்கலாம் கேரளாவை பார்த்து சுற்றுலாத்துறை பழக வேண்டும்
ADDED : ஜூலை 11, 2025 05:17 AM
மதுரை: நீர்வளத்துறைக்குட்பட்ட அணைகளை யொட்டி உள்ள பூங்காக்களில் செயற்கை அருவி, 'ரோப்கார்' வசதி செய்து கட்டணத்தை உயர்த்தி கேரளாவைப் போல சுற்றுலாத்துறை வருவாயை பெருக்க வேண்டும்.
தமிழகத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அணைகளை ஒட்டிய பகுதிகளில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் வழக்கமான செடி, கொடிகளுடன் ஆங்காங்கே இருக்கை வசதிகளும் அணை பற்றிய வரைபட மேப்களும் தான் இடம்பெற்றுள்ளன. சில வகை பூங்காக்களில் இடத்தின் தன்மைக்கேற்ப கண்ணைக் கவரும் மலர்ச்செடிகள் பராமரிக்கப்படுகின்றன. அதைத் தவிர வேறெந்த வகையான புதுமைகளும் இல்லை.
1955 ல் சென்னை மாகாணமாக இருந்த போது மலம்புழா அணை (தற்போதைய கேரளா) கட்டப் பட்டது. மாநிலமாக பிரிந்தபின் கேரளா பாலக்காட்டில் இந்த அணை உள்ளது. அணையின் கார்டன் பகுதியில் இருந்து 'ரோப்கார்' துவங்கி மறுபகுதி வரை கேபிள் காரில் அந்தரத்தில் தொங்கிய படியான 20 நிமிட 'த்ரில்லிங்' பயணத்தில் தண்ணீரின் அழகையும் அணையின் தோற்றம், சுற்றுப்புற மரம் செடிகளையும் பார்த்தபடி 60 அடி உயரத்தில் 2000 அடி நீளம் வரை செல்வது சுற்றுலா பயணிகளை கவர்கிறது. ஒரு கேபிள் காரில் இருவர் வீதம் 64 கார்கள் அடுத்தடுத்து ஒரே நேரத்தில் இயக்கப்படுகின்றன.
அணைப்பகுதியை மேலிருந்து பார்க்கும் வகையிலான 'ரோப்கார்' வசதி தமிழகத்தில் இதுவரை அமைக்கப்படவில்லை.
தமிழகத்தைப் பொறுத்தவரை தேனியில் வைகை அணை, திருநெல்வேலியில் மணிமுத்தாறு அணை, கன்னியாகுமரியில் பேச்சிப்பாறை, கோவையில் ஆழியார் அணை, சேலத்தில் மேட்டூர் அணைப்பகுதிகளில் 'ரோப்கார்' செய்வதற்கு தனியார், பொதுமக்கள் பங்களிப்புடன் (பி.பி.பி.,) திட்டத்தை உருவாக்கலாம்.
அணையை ஒட்டியுள்ள பூங்காக்களில் தண்ணீருக்கு பஞ்சமில்லை என்பதால் பூங்காவில் செயற்கை அருவி போன்று உயரமான இடத்தில் இருந்து தண்ணீர் வேகமாக விழுவதை போன்று உருவாக்கி அருகிலேயே உடைமாற்றும் அறை அமைக்க வேண்டும். நீச்சல் குளம் அமைத்தால் பூங்காவிலேயே ஒருநாள் முழுவதும் சுற்றி வர வசதியாக இருக்கும். இதற்கான கட்டணத்தையும் அதிகரித்தால் உள்ளூர், வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுவதும் வருவர். இதன் மூலம் சுற்றுலாத்துறை வருவாயை பெருக்க முடியும்.

