நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் மதுரை ரயில்வே ஜங்ஷனில் இரு இடங்களில் நீர்மோர் வழங்கும் சேவை துவங்கப்பட்டது.
ரயில்வே இன்ஸ்பெக்டர் அஜித்குமார், கோட்ட வணிக இன்ஸ்பெக்டர் இளனி மணிகண்டன், ஸ்டேஷன் மேலாளர் கிருஷ்ணன், சங்கத்தலைவர் ஜெகதீசன், செயலாளர் ஸ்ரீதர், துணைத்தலைவர் செல்வம், செயற்குழு உறுப்பினர் சரவணபாலன் கலந்து கொண்டனர். கோடை காலம் முடியும் வரை தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நீர், மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

