/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நாங்கள் என்.டி.ஏ கூட்டணிதான்: பன்னீர்செல்வம்
/
நாங்கள் என்.டி.ஏ கூட்டணிதான்: பன்னீர்செல்வம்
ADDED : பிப் 08, 2024 06:27 AM
மதுரை : மதுரை விமானநிலையத்திற்கு வந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 'நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்.டி. ஏ.,) தான் உள்ளோம். விலகிச் சென்றது பழனிசாமி அணி,' என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
அ.தி.மு.க., கூட்டணி குறித்து அமித்ஷாவின் கருத்து அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. அவரவர் கட்சியை உயர்த்தி காண்பிப்பது அந்தந்த தலைவர்களின் பண்பாடு.
உறுதியாக பா.ஜ., கூட்டணி இந்தியாவை ஆள்கிற தனி பெரும்பான்மை பெறும். அதனால்தான் என்.டி.ஏ கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும் என மோடி கூறியுள்ளார்.
எங்களிடம் இருப்பவர்கள் உண்மையான அ.தி.மு.க., தொண்டர்கள்தான் என்பது லோக்சபா தேர்தலில் தெரியும். அ.தி.மு.க வுக்காக எப்போதும் கதவு திறந்திருக்கும் என அமித்ஷா குறிப்பிட்டது பா.ஜ., கூட்டணியை விட்டு விலகி சென்ற பழனிசாமி அணியை. நாங்கள் என்.டி.ஏ., கூட்டணியில் தான் உள்ளோம் என்றார்.

