/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வெயிலில் காய்கிறோம் மழையில் நனைகிறோம் முணுமுணுக்கும் மேலுார் பயணிகள்
/
வெயிலில் காய்கிறோம் மழையில் நனைகிறோம் முணுமுணுக்கும் மேலுார் பயணிகள்
வெயிலில் காய்கிறோம் மழையில் நனைகிறோம் முணுமுணுக்கும் மேலுார் பயணிகள்
வெயிலில் காய்கிறோம் மழையில் நனைகிறோம் முணுமுணுக்கும் மேலுார் பயணிகள்
ADDED : மார் 08, 2024 01:16 AM

மேலுார்: மேலுாரில் பஸ் ஸ்டாண்டு முன்புறம் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த வெளியூர் பஸ் ஸ்டாப்பை பயன்படுத்த முடியாமல் மூடி வைத்திருப்பதால் பஸ்சுக்காக வெயிலில் காத்து கிடக்கும்பயணிகள் அவதிப்படுகின்றனர்.
மேலுாரின் மையப்பகுதியில் 1965 முதல் கர்னல் பென்னி குயிக் பெயரில் பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. இதனை நவீன வசதிகளுடன் கட்டுவதற்காக ரூ.7.60 கோடியில் நிதி ஒதுக்கி, கட்டடபணிகளுக்காக 2023 மார்ச் 4ல் பஸ் ஸ்டாண்ட் மூடப்பட்டது. நகராட்சி சார்பில் ஊருக்கு வெளியே தொலைவில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓராண்டாகியும் பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடிவடையவில்லை. பொதுமக்கள், மாணவர்கள் வாட்டி வதைக்கும் வெயிலில் காத்துக் கிடக்கின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தற்காலிக பஸ் ஸ்டாண்டுக்கு தொலைதுாரம் நடக்க வேண்டியதிருப்பதால், வெயிலில் கை குழந்தைகளுடன் பெண்களும், முதியவர்களும் காத்துக் கிடப்பது பரிதாபமாக உள்ளது. வெயிலை தாங்க முடியாமல் முதியவர்கள் மயங்கி விழுகின்றனர்.
புதிதாக கட்டி வரும் பஸ் ஸ்டாண்ட் எதிரே ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பஸ் ஸ்டாப்பை நகராட்சி அதிகாரிகள் துணியால் மூடி வைத்துஉள்ளனர். புதிய பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வரும் வரை வெளியூர் பஸ் ஸ்டாப்பை திறக்க வேண்டும் என்றனர்.
கமிஷனர் கணேசன் கூறுகையில், மக்களின் தேவை குறித்து நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

