ADDED : ஏப் 15, 2025 06:28 AM
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 106ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம் அனுசரிப்பு மற்றும் தமிழ்ப் புத்தாண்டு விழா நடந்தது.
மியூசிய செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். யோகா மாணவி ராதிகா வரவேற்றார். இக்னோ ஓய்வுபெற்ற துணைப் பதிவாளர் முத்தானந்தம் பேசுகையில், 'உலக மக்களுக்கு அகிம்சையை போதிக்கும் இந்திய மண்ணில் அரங்கேறிய கொடூரமான செயல் ஜாலியன் வாலாபாக் படுகொலை.
மாணவர்கள் இந்திய விடுதலைக்காக பாடுபட்டவர்களின் தியாகங்களை போற்றி, காந்திய அகிம்சை வழியை பின்பற்ற வேண்டும்' என்றார்.
'தமிழ்ப் புத்தாண்டே வருக'எனும் தலைப்பில் பிரபு கவிதை வாசித்தார். ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் தேவதாஸ், இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் மணிமாறன், நகை மதிப்பீட்டாளர் சங்கர்லால், யோகா மாணவர்கள் கோதாவரி, மணிகண்டன் பங்கேற்றனர். மாணவி சிந்துஜா நன்றி கூறினார்.