/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விளைநிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்: அன்புமணி பேச்சு
/
விளைநிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்: அன்புமணி பேச்சு
விளைநிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்: அன்புமணி பேச்சு
விளைநிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்: அன்புமணி பேச்சு
ADDED : டிச 27, 2024 05:13 AM

மேலுார்: மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, வல்லாளபட்டி பகுதி மக்களை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி நேரில் சந்தித்து டங்ஸ்டன் சுரங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
மேலுார் தாலுகாவுக்கு உட்பட்ட அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, வல்லாளபட்டி பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பா.ம.க., தலைவர் அன்புமணி கிராம மக்களை நேரில் சந்தித்தார். அப்போது அவர், ''டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் கருத்து.
இக்கிராமத்தில் உள்ள ஒரு சென்ட் நிலத்தை கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம். விவசாயத்தையும், விளை நிலங்களையும் காப்பது எங்களின் கடமை.
ஆனால் விவசாயத்தை அழிப்பது தி. மு.க., அரசின் வேலையாக உள்ளது. தமிழக அரசு சட்டசபையில் இப்பகுதி முழுவதையும் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் தளமாக நிறைவேற்றினால் போதுமானது அல்ல. அதை சட்டமாக நிறைவேற்ற வேண்டும். அரிட்டாபட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளை பாதுகாக்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போக தயாராக உள்ளோம்,'' என்றார்.