ADDED : ஆக 23, 2026 07:12 PM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் நேற்று 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்ததால் நகரெங்கும் உறவினர்கள் கூட்டம் அலைமோதியது.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முகூர்த்த நாட்களில் பதிவு திருமணங்கள், பரிகார திருமணங்கள், தவிர மண்டபங்களில் பதிவு இல்லாமல், நுாற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கும்.
ஆடி மாதம் திருமணம் செய்து கொள்வதை பக்தர்கள் தவிர்ப்பதால், ஆவணி மாத ஆரம்ப முகூர்த்த நாளில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 106 திருமணங்கள் நடந்தன. இதுதவிர கோயில் மண்டபங்களில் பதிவு செய்யப்படாமல் 50 க்கும் மேற்பட்ட, பரிகார திருமணங்கள் நடந்தன. மேலும் நகரில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களிலும் திருமணங்கள் நடந்தன. இதனால் நகர் முழுவதும் நெரிசல் இருந்தது. கோயிலில் பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
