/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'வெட்டிங் டூர், டெம்பிள் வெட்டிங் டூர்' சுற்றுலா நிபுணர்கள் விருப்பம்
/
'வெட்டிங் டூர், டெம்பிள் வெட்டிங் டூர்' சுற்றுலா நிபுணர்கள் விருப்பம்
'வெட்டிங் டூர், டெம்பிள் வெட்டிங் டூர்' சுற்றுலா நிபுணர்கள் விருப்பம்
'வெட்டிங் டூர், டெம்பிள் வெட்டிங் டூர்' சுற்றுலா நிபுணர்கள் விருப்பம்
ADDED : செப் 25, 2025 03:38 AM
மதுரை : மற்ற மாநிலங்களைப் போல 'வெட்டிங் டூர், டெம்பிள் வெட்டிங் டூர்' போன்ற நிகழ்ச்சிகளை தமிழகத்திலும் பிரபலபடுத்த அரசு முயற்சிக்க வேண்டும்'' என சுற்றுலாத் துறை நிபுணர்கள் தெரிவித்தனர்.
மதுரை டிராவல் கிளப், தென்னிந்திய ஓட்டல், ரெஸ்டாரென்ட்க் சங்கம் (சைரா), இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில் நாளை (செப்.26) மாலை 6:00 மணிக்கு மதுரை ஐடா ஸ்கட்டர் அரங்கில் சுற்றுலா சார்ந்த வாங்குவோர் விற்போர் சந்திப்பு கூட்டம் துவங்குகிறது.
இதுகுறித்து சைரா இயக்குநர் (ஆப்ப ரேஷன்ஸ்) சுந்தர் சிங்காரம், பார்சூன் பாண்டியன் ஓட்டல் நிர்வாக இயக்குநர் வாசுதேவன், சி.ஐ.ஐ., மண்டலத் தலைவர் அஸ்வின் தேசாய், துணைத்தலைவர் ராஜிவ் ஜெயபாலன் கூறியதாவது:
செப். 27, 28 காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் சிறப்பு கண்காட்சியில் சுற்றுலாத்தொழில் சார்ந்த அனைத்துத் துறையினரின் 300 ஸ்டால்கள் இடம்பெறும். இது முழுக்க தொழில்சார்ந்த சந்திப்பு கூட்டம் என்பதால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. செப். 27 இரவில் சுற்றுலாத்துறை சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்படும்.
கேரளா, கோவா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு 'வெட்டிங் டூர்' எனப்படும் திருமண சுற்றுலாவிற்கு செல்வோர் அதிகரித்துள்ள னர். தமிழகத்தில் அதுபோன்ற நிறைய பிரபலமான இடங்கள் உள்ளன. அதை அரசு பிரபலப் படுத்தலாம் என்றனர்.