
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவ திருக்கல்யாணம் நடந்தது.
சுவாமி, தேவியர்களுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் பூதேவி, ஸ்ரீதேவியர், நாராயண பெருமாள் சப்பரங்களில் ரத வீதியில் உலா வந்து கோயில் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினர். சவுந்தரியம்மாள், லலிதா தலைமையில் திருமண சீர்வரிசையுடன் பெண்கள் ஊர்வலமாக வந்தனர். பின் வேத மந்திரம் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அலங்கார வண்ண ரதத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. ஏப்.,8 மாலை புஷ்பயாகம் நடக்கிறது.