ADDED : செப் 28, 2025 02:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: தேனுாரில் சாக்கடை கால்வாயில் களைச்செடிகள் வளர்ந்து கழிவுநீர் செல்ல வழியில்லாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கு பொன்னர் சங்கர் கோயில் அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் செல்லும் சாக்கடை கால்வாயில் செடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
கொட்டப்படும் குப்பையை முறைப்படி அகற்றாததால், கழிவுநீர் அடைபட்டுள்ளது. தேங்கிய கழிவுநீரால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது. சாக்கடை கால்வாயை துார்வாரி சுத்தம் செய்து, கழிவுநீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்த ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.