ADDED : ஆக 16, 2026 07:41 PM
மதுரை: மாநகராட்சியின் 5 மண்டலங்களில் வாரந்தோறும் மண்டலத்துக்கு ஒரு வார்டு வீதம், 5 வார்டுகளில் சனிக்கிழமைதோறும் குப்பை அகற்றுவது உட்பட பிற பொது சுகாதார பணிகள் மேற்கொள்ள கமிஷனர் கவுரவ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் ஆனையூர் மற்றும் மிளகரணை, சாத்தமங்கலம், பெரியார், கிருஷ்ணன் கோயில் மற்றும் சின்ன பூக்கடை பகுதி, அவனியாபுரம் வார்டுகளில் துாய்மை பணி நடந்தது.
குப்பை மேலாண்மை மட்டுமின்றி கால்வாய் அடைப்பு அகற்றம், மெயின் ரோடுகளில் மண் அகற்றம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள் விற்பவர்களிடம் அபராத நடவடிக்கை மேற்கொள்ளுதல், பொது கழிப்பிடங்கள் சுத்தமாக இருப்பதை மேற்பார்வை செய்தல், சுவரொட்டிகள் அகற்றுதல், பள்ளி வளாகங்களை துாய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
