/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வணிக வரித்துறை அதிகாரிக்கு மிரட்டல்; வார இதழ் நிருபர் கைதாகி விடுதலை
/
வணிக வரித்துறை அதிகாரிக்கு மிரட்டல்; வார இதழ் நிருபர் கைதாகி விடுதலை
வணிக வரித்துறை அதிகாரிக்கு மிரட்டல்; வார இதழ் நிருபர் கைதாகி விடுதலை
வணிக வரித்துறை அதிகாரிக்கு மிரட்டல்; வார இதழ் நிருபர் கைதாகி விடுதலை
ADDED : அக் 28, 2025 11:36 PM
தேனி: தேனி வணிகவரித்துறை கூடுதல் துணை ஆணையர் திராவிடசெல்வியிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக, திருப்பூரை சேர்ந்த வார இதழ் நிருபர் போஸை 68, கைது செய்து நிபந்தனை அடிப்படையில் போலீசார் விடுவித்தனர்.
தேனி வணிக வரித்துறை அலுவலகத்திற்கு அக்., 27ல் திருப்பூர் மாவட்டம் பெரிச்சிபாளையம் கிழக்குப் பகுதி போஸ் என்பவர் சென்றார். அங்கிருந்த கூடுதல் துணை ஆணையர் திராவிடச் செல்வியை சந்தித்து, தன்னை, 'அரசியல் ஒற்றன்' பத்திரிகையின் தலைமை நிருபர் என அறிமுகமானார். 'போடியில் வணிகவரி அலுவலராக பணியாற்றுபவர் குறித்து வார இதழில் செய்தி வெளியிட்டோம். அடுத்து வரும் இதழில் உங்கள் மீதுள்ள புகார் குறித்து செய்தி வெளியிட உள்ளோம்,' என மிரட்டினார். அதற்கு பதிலளித்த துணை ஆணையர், 'என் மீது வரும் புகார்களை நான் நீதிமன்றம் மூலம் தீர்த்துக் கொள்கிறேன்,' என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த போஸ், வணிகவரித்துறை கூடுதல் அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்து, கேட்கும் பணத்தை தரவேண்டும் எனக்கூறி மிரட்டல் விடுத்தார்.
துணை ஆணையர் புகாரில் தேனி எஸ்.ஐ., ராஜமாணிக்கம், போஸ் மீது பெண் வன்கொடுமை, கொலைமிரட்டல் வழக்கில் கைது செய்தார். கைதான போஸ், இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துள்ளதாலும், வயது மூப்பின் அடிப்படையில் நிபந்தனையில் விடுவிக்க கோரினார். அதன்படி நிபந்தனையுடன் போலீசார் அவரை விடுவித்தனர்.

