ADDED : செப் 08, 2025 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை நுகர்பொருள் ஷாப் அண்ட் மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் மோகன் கூறிய தாவது:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொண்டு வந்த ஜி.எஸ்.டி., வரி விகித மாற்றங்களை வரவேற்கிறோம். 5, 18 சதவீதம் வரி என்று முக்கிய பொருள்களுக்கு வரி கொண்டு வந்துள்ளது, அத்தியாவசிய பொருட்களின் விலை குறைய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
மிட்டாய், பிஸ்கட், மெழுகுவர்த்தி, நோட்டு புத்தகங்களுக்கான வரியை 5 சதவீதமாக குறைத்துள்ளதும் வரவேற்கத்தக்கது. வேளாண் இயந்திரங்கள், புண்ணாக்கு போன்றவற்றுக்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும். அத்தியாவசிய மருந்துகளுக்கு முழுமையாக வரி விலக்கு கிடைத்தால் மக்கள் பயன் பெறுவர்.
இவ்வாறு கூறினார்.