ADDED : நவ 24, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: ஜூனியர் உலகக்கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க மதுரை வந்த கனடா அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஏர் இந்தியா விமான மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்த வீரர்களுக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி கரகாட்டம், ஒயிலாட்டம், நாதஸ்வரம், தவில் வாசித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர்களை எஸ்.பி., அரவிந்த் மாலை அணிவித்து வரவேற்றார்.

