/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டோல்கேட் ஆண்டு கட்டணத்திற்கு வரவேற்பு
/
டோல்கேட் ஆண்டு கட்டணத்திற்கு வரவேற்பு
ADDED : ஜூன் 19, 2025 02:51 AM
மதுரை: ஆக. 15 முதல் வணிகப்பயன்பாடு அல்லாத வாகனங்களுக்கான ஆண்டு டோல்கேட் கட்டணம் ரூ.3000 என்று மத்திய அரசு அறிவித்ததை தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.
தலைவர் வேல்சங்கர், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம், கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம் கூறியதாவது: ஆக. 15 முதல் கார், ஜீப், பயணிகள் பயணிக்கும் வேன் ஆகிய வாகனங்களுக்கு 'பாஸ் டேக்' கட்டணமாக ஆண்டுக்கு ரூ.3000 கட்டணம் செலுத்தலாம் அல்லது ஆண்டுக்கு 200 முறை டோல்கேட்டை பயன்படுத்தலாம் என்று அறிவித்ததை வரவேற்கிறோம்.
இதனால் அடிக்கடி வெளியூர் செல்லும் பொதுமக்கள், வணிகர்களுக்கு பயனுள்ளதாக அமையும். அதே முறையில் சரக்குகளை கொண்டு செல்லும் 'டாடா ஏஸ், வேன்' ஆகிய சிறிய சரக்கு வாகனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5000 கட்டணமும், லாரிகள், பாரஸ்ட் லாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10ஆயிரம் வீதம் டோல்கேட் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்றனர்.