ADDED : ஜூன் 04, 2025 01:29 AM
திருமங்கலம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் செயலாளர் மணிமாறன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் முத்துராமலிங்கம், லதா, ஒன்றிய செயலாளர் மதன்குமார், சண்முகம் நகர் செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யா, துணைத்தலைவர் ஆதவன் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
நகர் தி.மு.க., சார்பில் ஜெனகை மாரியம்மன் கோயில் முன்பு மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். செயலாளர் சத்யபிரகாஷ் தலைமை வகித்தார். பேரூராட்சி சேர்மன் ஜெயராமன் முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் தீர்த்தம், மூத்த நிர்வாகி அருணா பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றம்
மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் கருணாநிதி படத்திற்கு மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானத்தை துவக்கி வைத்தார். இளைஞரணி அமைப்பாளர் விமல், நிர்வாகிகள் ஆறுமுகம், பாண்டியன், ரவி கலந்து கொண்டனர்.