ADDED : டிச 19, 2024 05:13 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே சீமானுத்து ஊராட்சி மெய்யணம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க., வடக்கு ஒன்றியம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
ஒன்றியச் செயலாளர் அஜித்பாண்டி தலைமை வகித்தார். உசிலம்பட்டி நகர், எழுமலை பேரூராட்சி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றியச் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் மூர்த்தி, தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் விவசாயிகளுக்கு டிராக்டர், மாற்றுத்திறனாளிகளுக்கு டூவீலர்கள், உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அமைச்சர் மூர்த்தி பேசுகையில், ''2026 சட்டசபைத் தேர்தலில் மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி உறுதி. அதில் உசிலம்பட்டி தொகுதி முதன்மையானதாக இருக்கும். முதல்வர் ஸ்டாலின், இங்கு யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்'' என்றார்.