நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மதுரை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.
இளைஞரணி செயலாளர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ், சிறுபான்மையினர் பிரிவு பொருளாளர் காத்துன்பீவி, பெரியரத வீதி தர்ஹா பள்ளிவாசல் நிர்வாகிகள் சீனியர் ஒஜீர்கான், ஆரிப்கான், இஸ்மாயில்கான், மகபூப்பாஷா, அஜ்ரத்செய்யது, இஸ்மாயில், அன்சர், சாகுல்ஹமிது கலந்து கொண்டனர்.

