நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மதுரை கே.கே நகர் அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சங்க உறுப்பினர் ராஜ்குமார் பள்ளிக்கு போர்வெல், 'ஆர்.ஓ பிளான்ட்'அமைத்து திறந்து வைத்தார். மாணவர் களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆளுநர் செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட ஜி.எல்.டி ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் ஆரோக்கிய ராஜ் முன்னிலை வகித்தார். இளங்கோவன், பிரேமா, சையது ஜாபர் சிறப்பு விருந்தினர் களாக பங்கேற்றனர். தாளாளர் எபினேசர் துரைராஜ், தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார் ஒருங்கிணைத்தனர். நிர்வாகிகள் மணிகண்டன், ரவி கும ரே சன் பங்கேற்றனர்.