/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் ரூ.8 ஆயிரம் கோடியில் நலத்திட்டங்கள்: அமைச்சர் மூர்த்தி
/
மதுரையில் ரூ.8 ஆயிரம் கோடியில் நலத்திட்டங்கள்: அமைச்சர் மூர்த்தி
மதுரையில் ரூ.8 ஆயிரம் கோடியில் நலத்திட்டங்கள்: அமைச்சர் மூர்த்தி
மதுரையில் ரூ.8 ஆயிரம் கோடியில் நலத்திட்டங்கள்: அமைச்சர் மூர்த்தி
ADDED : செப் 08, 2025 06:11 AM
மதுரை : 'மதுரையில் ரூ.8 ஆயிரம் கோடியில் நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
மதுரையில் ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் புதிய தார் ரோடு அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற மூர்த்தி கூறியதாவது:
மதுரையில் குடிநீர் இணைப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில் ரோடுகள் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். என்ன செய்திருக்கிறீர்கள் என எப்போதும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். மதுரையில் ரூ.8 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அவர்களுக்கு கூறிக்கொள்கிறேன்.
மேற்கு தொகுதியில் மட்டும் 300க்கும் மேற்பட்ட நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளன. ரூ.340 கோடியில் இணைப்பு பாலங்கள் தி.மு.க., ஆட்சியில் நடக்கிறது.
நகரில் மட்டுமல்ல சேடபட்டி, திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, மேலுார் என மாவட்டப் பகுதிகளிலும் பணிகள் நடக்கின்றன. இந்த ஆட்சியில் தான் மக்களுக்கு தேவையான திட்டங்கள் முழுமையாக நடக்கிறது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அளிக்கப்படும் மனுக்களுக்கு உரிய முறையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். விடுபட்ட அனைத்துப் பெண்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. செய்த பணிகளுக்கு விளம்பரம் தேவையில்லை. அதனை மக்கள் பார்த்துக்கொள்வர்.
முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ பணத்தை மூர்த்தி தான் மீட்டு தந்தார் என்கின்றனர். நான் எந்த போலீஸ் ஸ்டேஷன் சென்று அவருக்காக பேசினேன்.
அவரது வேலையை அவர் பார்க்கிறார். எனது வேலையை நான் பார்க்கிறேன். செங்கோட்டையன் கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.