/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மருத்துவ கட்டமைப்புக்கு ஒதுக்கிய ரூ.200 கோடி என்னாச்சு: அ.தி.மு.க.,
/
மருத்துவ கட்டமைப்புக்கு ஒதுக்கிய ரூ.200 கோடி என்னாச்சு: அ.தி.மு.க.,
மருத்துவ கட்டமைப்புக்கு ஒதுக்கிய ரூ.200 கோடி என்னாச்சு: அ.தி.மு.க.,
மருத்துவ கட்டமைப்புக்கு ஒதுக்கிய ரூ.200 கோடி என்னாச்சு: அ.தி.மு.க.,
ADDED : ஜன 31, 2025 07:26 AM
மதுரை; ''தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தி உயர் சேவைக்காக ரூ.200 கோடியை காப்பீட்டு தொகுப்பு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டது. அது என்ன ஆனது என்று தெரியவில்லை'' என அ.தி.மு.க., மருத்துவரணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் சந்தேகம் எழுப்பினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: 4 ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லுாரியை கூட உருவாக்காத கையாளாத அரசாக ஸ்டாலின் அரசு உள்ளது. குறிப்பாக 2024-- 25 பட்ஜெட்டில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு போதைப் பழக்கங்கள் மீட்பு மையங்களை நிறுவி, மது மற்றும் போதைப் பொருள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மன ஆலோசனை மருத்துவ சிகிச்சை அளிக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கினர். தமிழகத்தில் மது குடிப்போர் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது. மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தி உயர் சேவைக்காக, ரூ.200 கோடியை காப்பீட்டு தொகுப்பு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டது. அது என்ன ஆனது என்று தெரியவில்லை. கடந்த 2024--25 நிதியாண்டில் மட்டும் சுகாதாரத்துறைக்கு ரூ.20,190 கோடி ஒதுக்கப்பட்டது.
அதேபோல் 2023--24ல் ரூ.18,601 கோடியும், 202-2-23ல் ரூ.17,901 கோடியும் ஒதுக்கப்பட்டது. இதுவரை ஸ்டாலின் அரசு நிதிநிலை அறிக்கையில் ரூ.75,694 கோடி சுகாதார துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு மருத்துவமனைகளின் தரம் மேம்படவில்லை. மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் இல்லை. பணியிடங்கள் நிரப்பப்படவில்லை மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் என்பது ஒரு நபருக்கு கொடுக்கும் மருந்துகளை மூவருக்கு கொடுப்பதாக கணக்குகாட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறு கூறினார்.

