/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளியில் நடந்தது முகாம் மரத்தடியில் நடந்தது வகுப்பறை
/
பள்ளியில் நடந்தது முகாம் மரத்தடியில் நடந்தது வகுப்பறை
பள்ளியில் நடந்தது முகாம் மரத்தடியில் நடந்தது வகுப்பறை
பள்ளியில் நடந்தது முகாம் மரத்தடியில் நடந்தது வகுப்பறை
ADDED : ஆக 06, 2025 07:52 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் பள்ளி வளாகத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்ததால், மாணவர்களுக்கு மரத்தடியில் பாடம் நடந்தது. இதற்கு அ.தி.மு.க.,வினர் கண்டனம் தெரிவித்ததால் வகுப்பறைக்குள் அமர வைத்தனர்.
உசிலம்பட்டியில் நேற்று நகராட்சியின் 6,7,8 வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் மதுரை ரோடு தனியார் மண்டபத்தில் நடைபெறும் என அறிவித்தனர். அந்த மண்டபத்தில் இடவசதி பற்றாக்குறையால் ஆக.2ல் அந்த பகுதி டி.இ.எல்.சி., பள்ளியில் முகாம் அமைத்தனர். 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியின் வகுப்பறைகளில் அதிகாரிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டதால், மாணவர்களை பள்ளி வளாகத்தில் மரங்களின் நிழலில் அமரவைத்து பாடம் நடத்தினர்.
உசிலம்பட்டி அ.தி.மு.க. நகர் செயலாளர் பூமாராஜா தலைமையில் கட்சியினர் அங்கு வந்தனர். 'பள்ளி வளாகத்தில் விடுமுறை தினங்களில் முகாம் நடத்தலாம். மாணவர்களை எப்படி மரத்தடியில் அமர வைக்கலாம் எனக் கேள்வி எழுப்பினர். தரையில் அமர்ந்து எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாசில்தார் பாலகிருஷ்ணன், நகராட்சி கமிஷனர் இளவரசன் உள்பட அதிகாரிகள், மாணவர்களை வகுப்பறைக்குள் அமர வைக்கிறோம். ஏற்பாடு செய்த மண்டபத்தில் இடவசதி பற்றாக்குறையால் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. வரும் நாட்களில் பள்ளி வேலை நாட்களில் முகாம் நடத்தாமல் பார்த்துக் கொள்கிறோம் என்றனர். தொடர்ந்து மரத்தடியில் அமர்ந்திருந்த மாணவர்களை பிற வகுப்பறையில் அமரவைத்தனர்.