/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வனப்பகுதியில் சட்டவிரோத குவாரிக்கு எதிரான நடவடிக்கை என்ன : உயர்நீதிமன்றம் கேள்வி அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
/
வனப்பகுதியில் சட்டவிரோத குவாரிக்கு எதிரான நடவடிக்கை என்ன : உயர்நீதிமன்றம் கேள்வி அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
வனப்பகுதியில் சட்டவிரோத குவாரிக்கு எதிரான நடவடிக்கை என்ன : உயர்நீதிமன்றம் கேள்வி அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
வனப்பகுதியில் சட்டவிரோத குவாரிக்கு எதிரான நடவடிக்கை என்ன : உயர்நீதிமன்றம் கேள்வி அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
ADDED : ஆக 14, 2025 04:41 AM
மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை தோவாளையில் சட்டவிரோத குவாரி தொடர்பாக சம்பந்தப்பட்டோருக்கு எதிராக அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை அறிக்கையாக கலெக்டர் தாக்கல் செய்ய உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ஆரல்வாய்மொழி ஜோன்சியன் ராஜா தாக்கல் செய்த பொதுநல மனு:
மேற்குத் தொடர்ச்சி மலை தோவாளையில் வன உரியின சரணாலயம் உள்ளது. இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. இங்கு சட்டவிரோதமாக சிலர் மண் குவாரி நடத்துகின்றனர். நீர்நிலைகளை அழிக்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மற்றும் வனப்பகுதிக்கு பாதிப்பு ஏற்படும். கன்னியாகுமரி கலெக்டரிடம் புகார் அளித்தோம். குவாரிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏற்கனவே விசாரணையின்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: விவசாய நோக்கங்களுக்காக நிலத்தை சமன் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், நிலத்திலிருந்து அதிக அளவு மண் அள்ளப்படுகிறது. இது சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளுக்கு சமம். இதுபோல் பல நிலங்களில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுகிறது என மனுதாரர் தரப்பு கூறியது. சட்டவிரோத குவாரிக்கு எதிரான நடவடிக்கை குறித்து கலெக்டர் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு நேற்று விசாரித்தது.
நீதிபதிகள்: கனிமவளம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எதிராக எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காணொலியில் ஆஜரான கலெக்டர் அழகுமீனா: நான்குவழிச்சாலை அமைக்கும் பணிக்காக 2018ல்மண் அள்ள அனுமதிக்கப்பட்டது. இதற்காக சிலர் விவசாய நிலத்தைதர முன்வந்தனர். சட்டவிரோத குவாரி 2019 ல் நிறுத்தப்பட்டது. தற்போது அங்கு குவாரி நடவடிக்கை எதுவும் இல்லை.சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் குவாரி நடத்த அனுமதி வழங்குவதில்லை.
மனுதாரர் தரப்பு வழக் கறிஞர் கார்த்திக்: உயர்நீதிமன்றம் ஏற்கனவே இடைக்காலத் தடை விதித்ததால் குவாரி நிறுத்தப்பட்டது. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: 2019 வரை நடந்த சட்டவிரோத குவாரி தொடர்பாக சம்பந்தப்பட்டோருக்கு எதிராக அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்த விபரத்தை ஆக.21ல் அறிக்கையாக கலெக்டர் தாக்கல் செய்ய வேண்டும். கலெக்டர் ஆஜராக விலக்களிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.