/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிறந்த அரசு பஸ் டிரைவர்களுக்கு விருது வழங்குவதில் என்ன வில்லத்தனம்: தொழிற்சங்க 'அரசியலால்' பாதி பேருக்கு கிடைக்கல

ADDED : ஏப் 03, 2025 04:39 AM

மதுரை: மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் கடந்தாண்டு விபத்தின்றி பஸ்களைஇயக்கிய டிரைவர்கள் 110 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களில் 55 பேருக்குவிருது வழங்கப்பட்டது. ஆளுங்கட்சி தொழிற்சங்க நிர்வாகிகளுக்குள் 'அரசியலால்'மற்றவர்களுக்கு 9 மாதங்களுக்கும் மேலாக விருது வழங்கப்படவில்லை.
மதுரை மண்டலத்தில் 700க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள், 250க்கும் மேற்பட்ட மொபசல் பஸ்கள் இயங்குகின்றன. இந்த பஸ்களில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர்கள் பலநுாறு பேர் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்கங்களில் இணைந்துள்ளனர். இப்பணியாளர்களை இயக்குவதில் தொழிற்சங்கங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில் ஆளும் கட்சி சங்கம் என்றால் கேட்கவே வேண்டாம்.
சிறப்பாக பணியாற்றுவோருக்கு போக்குவரத்துக் கழகம் பரிசு வழங்கி கவுரவிக்கிறது. அதிலும் விபத்தின்றி பஸ்களை இயக்கும் டிரைவர்களை கண்டறிந்து ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவிக்கிறது. கடந்த 2023 - 24ம் ஆண்டுக்கு மதுரை கோட்டத்தில் 110 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களில் 10 பேருக்கு சென்னை விழாவில் 100 கிராம் வெள்ளிப்பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. சிலருக்கு மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் அதிகாரிகள் வழங்கினர். இவ்வாறு கடந்த மே, ஜூனில் மொத்தம் 55 பேருக்கு விருது வழங்கப்பட்டது. அதன்பின் 9 மாதங்களாகியும் மீதியுள்ள 55 பேருக்கு இன்னும் விருது வழங்கப்படவில்லை.
ஊழியர்கள் சிலர் கூறுகையில், ''தொழிற்சங்க நிர்வாகிகள் சிலருக்கு எதிரான பணியாளர் ஒருவரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு விருது கிடைக்காமல் தவிர்க்க, சிலர் செய்யும் அரசியலால் மற்ற டிரைவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்றனர்.