/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருமங்கலத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் திறப்பு எப்போது
/
திருமங்கலத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் திறப்பு எப்போது
திருமங்கலத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் திறப்பு எப்போது
திருமங்கலத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் திறப்பு எப்போது
ADDED : நவ 20, 2024 05:36 AM

திருமங்கலம் : திருமங்கலத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கும் பத்திரப் பதிவு அலுவலகம், புதிய கட்டடத்திற்கு இடம்மாறுவது எப்போது என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருமங்கலத்தில் மதுரை ரோட்டில் 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான கட்டடத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வந்தது. போதிய இடவசதி இன்மை, கட்டடங்கள் ஒழுகுதல் போன்ற பிரச்னைகள் இருந்து வந்தது. ஓராண்டுக்கு முன்பு ரூ. ஒரு கோடியே 35 லட்சம் மதிப்பில் மாடியுடன் கூடிய புதிய கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கியது.
அங்கு செயல்பட்டு வந்த பத்திரப்பதிவு அலுவலகம் தற்காலிகமாக பானு தியேட்டர் அருகில் ஒரு வாடகை கட்டடத்தில் செயல்பட்டது. இங்கு வாகனங்கள் நிறுத்த போதிய இட வசதி இல்லாமல் குறுகிய இடத்தில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதனால் பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
மதுரை ரோட்டில் பழைய அலுவலகம் இருந்த இடத்தில் புதிதாக அலுவலக கட்டுமானப் பணிகள் முடிந்து விட்டன. எனவே வாடகை கட்டடத்தில், இட நெருக்கடியில் இயங்கும் அலுவலகத்தை புதிய கட்டடத்திற்கு அலுவலகத்தை விரைவில் மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.