/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விளையாட்டு அறிவியல் மையத்தை பயன்படுத்த '‛கட்டணம்' ஆணையம் முடிவெடுப்பது எப்போது
/
விளையாட்டு அறிவியல் மையத்தை பயன்படுத்த '‛கட்டணம்' ஆணையம் முடிவெடுப்பது எப்போது
விளையாட்டு அறிவியல் மையத்தை பயன்படுத்த '‛கட்டணம்' ஆணையம் முடிவெடுப்பது எப்போது
விளையாட்டு அறிவியல் மையத்தை பயன்படுத்த '‛கட்டணம்' ஆணையம் முடிவெடுப்பது எப்போது
ADDED : ஜன 22, 2025 08:50 AM
மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையத்தின் உடல் இயக்க ஆய்வுகளை கண்டறியும் கருவிகளை தனியார் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயன்படுத்துவதற்கான கட்டணம் நிர்ணயிப்பது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) விரைவில் முடிவெடுக்க வேண்டும்.
விளையாட்டு வீரர்களின் இதயத்துடிப்பு, உயரம் தாண்டுதல், ஓட்டத்திற்கான வேகம்,தாவி குதித்தல் போன்ற பல்வகை திறன்களை கருவிகள் மூலம் கண்டறியும் வகையில்தமிழகத்தில் முதன்முறையாக 2018ல் ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம் கட்டப்பட்டது.
2024 ஜனவரியில் ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு துணைமுதல்வர் உதயநிதி வந்தபோது திறன் கண்டறியும் கருவிகள் வழங்கப்பட்டன.
கருவிகளும் பயன்பாடும்
'ஸ்பெக்ட் அனலைசர்' கருவியின் இருபுறமும் 30 மீட்டர் துாரத்திற்கு 6 கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். 30 மீட்டர் துாரத்தை வீரர் கடந்து செல்லும் போது அவரின் ஓட்டத்திறன், இதயத்துடிப்பு, எந்த இடத்தில் தொய்வடைகிறார் போன்ற விவரங்கள் கேமரா மூலம் பதிவாகும். அதை ஆய்வு செய்து வீரரின் திறனை கூடுதலாக்க பயிற்சிகள் தரப்படும்.
அதேபோல நீளம், உயரம் தாண்டுதல், வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு தாவி குதித்தல் முக்கியம். இந்த செயல்பாட்டை 'போர்ஸ் பிளேட்' கருவி மூலம் கண்காணித்து அதற்கேற்ப பயிற்சி தரப்படும். கை, கால் தசை, உடலின் பிற தசை இயக்கங்கள், தசைகளின் வலிமையை கண்டறிய 'கினோ மீட்டர்' கருவி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வீரர்கள் ஓடும் போது இதயத்துடிப்பை கண்டறிய 'டிரெட் மில்' வைக்கப்பட்டுள்ளது.
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி., விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு இக்கருவிகளை இயக்கி அவர்களின் செயல்பாடு கண்டறியப்படுகிறது. அடுத்ததாக தனியார் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் செயல்பாடுகளை கண்டறிய கட்டண அடிப்படையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கட்டண நிர்ணயத்தை ஆணையம் இன்னும் தெரிவிக்கவில்லை. விரைவில் கட்டண அறிவிப்பை வெளியிட்டால் தங்களது பலம், பலவீனத்தை அறிந்து விளையாட்டு திறனை மேம்படுத்தும் வாய்ப்பு வீரர்களுக்கு அமையும்.