/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பேரையூரில் மின்தடை அவதி எப்போது தீரும்
/
பேரையூரில் மின்தடை அவதி எப்போது தீரும்
ADDED : மே 16, 2025 03:24 AM
பேரையூர்: பேரையூர் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
சில நாட்களாக மழை வருவதற்கு முன்பே மின்தடை ஏற்பட்டு வருகிறது. பேரையூர் நகர் பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு பேரையூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.
சுற்று வட்டார பகுதிகளுக்கு சின்னக் கட்டளை, சாப்டூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் நடக்கிறது. சில மாதங்களாக இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். மழை வருவது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் கூட அதற்கு முன் பாகவே மின்தடை செய்யப்படுகிறது.
மழை பெய்தால் இரவு முழுவதும் கிராமப்புறங்களில் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இப்பிரச்னை குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.