/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம் எப்போது: கருத்தரங்கில் கேள்வி
/
ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம் எப்போது: கருத்தரங்கில் கேள்வி
ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம் எப்போது: கருத்தரங்கில் கேள்வி
ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம் எப்போது: கருத்தரங்கில் கேள்வி
ADDED : மே 26, 2025 02:19 AM
மதுரை: மதுரையில் எவிடென்ஸ் அமைப்பு சார்பில் 'சாதிய அமைப்புகளுக்கு எதிராக சிவில் சமூகத்தின் பங்களிப்பு' எனும் தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
இதில் 'எவிடென்ஸ்' அமைப்பின் இயக்குனர் கதிர் பேசியதாவது: 'தமிழகத்தில் மூன்றாண்டுகளில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. எஸ்.சி.,எஸ்.டி., பிரிவில் மதுரையில் 750 உட்பட 7 ஆயிரத்து 500 வழக்குகள் நீதிமன்றத்தில் தேங்கியுள்ளன.
கடந்த 7 ஆண்டுகளில் தமிழகத்தில் 62 ஆணவக்கொலைகள் நடந்துள்ளன. சாதிய வன்கொடுமையால் ஒவ்வொரு ஆண்டும் 8 பேர் கொல்லப்படுகின்றனர். ஆனால் குறைந்த அளவு குற்றம் நடப்பதாக அரசு கணக்கு காட்டுகிறது. ஆணவ கொலைக்கு தனிச்சட்டம் இயற்றுவதாக முதல்வர் கூறியும் இதுவரை இயற்றவில்லை.
பாதிக்கப்பட்டோருக்கு உதவ வேண்டிய அரசு, அவர்களுக்கு எதிராக நிற்கிறது. இது மாடல் ஆட்சியா அல்லது மாடலிங் ஆட்சியா தெரியவில்லை' என்றார். திரைப்பட இயக்குனர் சரவணன் உட்பட பலர் பேசினர்.