/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எப்போ திறந்துவிடுவீங்க சுகாதார வளாகத்தை
/
எப்போ திறந்துவிடுவீங்க சுகாதார வளாகத்தை
ADDED : ஏப் 22, 2025 06:15 AM

கொட்டாம்பட்டி: கருங்காலக்குடியில் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வர மறுப்பதாக ஊராட்சி நிர்வாகத்தின் மீது புகார் எழுந்துள்ளது.
கருங்காலக்குடியில் ஒத்தக்கடை பகுதியில் 1500 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்காக 2020--21ம் ஆண்டில் ரூ. 2.26 லட்சத்தில் ஆண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. அதிகாரிகளிடம் முறையிட்டும் பூட்டியே கிடக்கிறது.
சரவணகுமார்: சுகாதார வளாகம் பூட்டிக் கிடப்பதால் காடாம்பட்டி ரோடு, மயான பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். அதனால் சுகாதார சீர்கேடு, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த ரோட்டில் பெண்கள் செல்ல முடியாமல் பல கி.மீ., துாரம் சுற்றி செல்கின்றனர்.
ஏற்கனவே இப்பகுதியில் குளியல் தொட்டிக்கு அமைத்த போர்வெல் மோட்டாரும் பயன்பாட்டில் இல்லை. மயானத்தில் இறுதிச்சடங்கிற்கு வீட்டில் இருந்து தண்ணீர் கொண்டு செல்கிறோம். மக்களின் வரிப்பணத்தில் கட்டிய வளாகம் வீணாகிறது. சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.