/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எப்போதுதான் தடுப்புச் சுவர் பணிகளை துவக்குவீங்களோ
/
எப்போதுதான் தடுப்புச் சுவர் பணிகளை துவக்குவீங்களோ
ADDED : ஜூலை 21, 2025 03:02 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு வைகை தண்ணீர், மழைநீர் செல்லும் நிலையூர் கால்வாய் ரூ.6.50 கோடியில் சீரமைப்பு பணி 2 மாதங்களுக்கு முன்பு துவங்கியது.
திருப்பரங்குன்றம் வட்டார கண்மாய்கள், பெருங்குடி கண்மாய், கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய்க்கு நிலையூர் கால்வாய் மூலம் வைகை அணையில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த கால்வாய்க்குள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக விளாச்சேரியில் இருந்து சந்திரா பாளையம் வரை அனைத்து கழிவுகளும் கொட்டப்படுகிறது. துர்நாற்றம் வீசி, கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோயை பரப்புகின்றன.
விளாச்சேரி - சந்திரா பாளையம் இடையே குப்பை கொட்டுவதை தவிர்க்க, கால்வாயின் பக்கவாட்டில் 8 அடி உயரத்திற்கு கம்பி வலை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 2 மாதங்களுக்கு முன்பு தேவிநகர் - பாலசுப்பிரமணியன் நகர் இடையே இருந்த சிமென்ட் தடுப்புச்சுவர் மற்றும் மணல் தோண்டி ரோட்டின் மேல் போடப்பட்டது. குறுகலான அந்த ரோட்டில் பாதி வரை மணல் பரவிக் கிடப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
ஏழாவது நிறுத்தத்தில் தரைப்பாலம் சீரைமைக்கும் பணி நடப்பதால் பாலசுப்பிரமணியன் நகரில் இருந்து வெளியோறுவோர், உள்ளே வருவோர் அந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர். இதனால் 2 மாதங்களுக்கும் மேலாக அந்த ரோட்டில் நெரிசல் ஏற்படுகிறது.
அந்த தரைப்பால பணிகள் நடக்கிறது. எப்போது பயன்பாட்டுக்கு வரும் என தெரியவில்லை. திட்டமிடல் இன்றி கால்வாயை ஒட்டிய ரோட்டிலும் ஆரம்ப பணிகளை துவக்கி கிடப்பில் போட்டு விட்டனர். போக்குவரத்து அதிகம் இல்லாத கால்வாய் ஒட்டியுள்ள பகுதியில் பணிநடக்கிறது. அதேசமயம் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் மணலை தோண்டி ரோட்டில் போட்டுச் சென்றதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமோ தெரியவில்லை என்றனர்.