ADDED : பிப் 20, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். விளையாட்டு துறையில் சாதிக்க நினைக்கும் அவர்களின் திறமை பறிபோகும் வாய்ப்பு உள்ளது.
மாணவிகளின் நலன் கருதி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் விளையாட்டு உபகரணங்கள் வாங்கி தரப்பட்டாலும் மைதானம் இல்லாத சூழலில் வீணாகின்றன. மாவட்ட நிர்வாகம் இப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைத்து மாணவிகளை ஊக்குவிக்க வேண்டும்.

