sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வேட்பாளர் 'கோதா'வில் தி.மு.க., நிர்வாகிகள்: யாருக்கு யோகம்? எட்டு தொகுதிகளில் களம் காணப்போவது யார்

/

வேட்பாளர் 'கோதா'வில் தி.மு.க., நிர்வாகிகள்: யாருக்கு யோகம்? எட்டு தொகுதிகளில் களம் காணப்போவது யார்

வேட்பாளர் 'கோதா'வில் தி.மு.க., நிர்வாகிகள்: யாருக்கு யோகம்? எட்டு தொகுதிகளில் களம் காணப்போவது யார்

வேட்பாளர் 'கோதா'வில் தி.மு.க., நிர்வாகிகள்: யாருக்கு யோகம்? எட்டு தொகுதிகளில் களம் காணப்போவது யார்


UPDATED : மார் 18, 2026 07:21 AM

ADDED : மார் 18, 2026 05:06 AM

Google News

UPDATED : மார் 18, 2026 07:21 AM ADDED : மார் 18, 2026 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தங்கள் தொகுதி வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. மதுரையில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 8 ல் தி.மு.க.,வும், 2 ல் கூட்டணியும் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது. இத்தேர்தலில் '200 நிச்சயம்; 200க்கு மேல் லட்சியம்' என்ற கோஷத்துடன் ஆளும் தி.மு.க., களம் இறங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் கொத்தாக அள்ள வேண்டும் என அமைச்சர் மூர்த்திக்கு கட்சித் தலைமை 'அசைன்மென்ட்' கொடுத்துள்ளது.

தொகுதி வாரியாக போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்த நிர்வாகிகளுக்கு இன்று நேர்காணல் துவங்கும் நிலையில் ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் யார் எனத் தெரியும். தற்போதைய நிலையில் 'எந்தத் தொகுதிக்கு யார் வேட்பாளர்' என கட்சிக்குள் பட்டிமன்றமே நடக்கிறது.

தி.மு.க.,வினர் கூறியதாவது: வேட்பாளர்கள் தேர்வில் இம்முறை தலைமை அதிக கவனம் செலுத்துகிறது. கட்சியில் செயல்பாடு, பென் டீம், உளவுத்துறை ரிப்போர்ட் அடிப்படையில் வேட்பாளர் தேர்வு இருக்கும். மேலுார் காங்.,க்கும், மார்க்சிஸ்ட்டுக்கு ஒரு தொகுதி என கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளது. மார்க்சிஸ்ட்டுக்கு ஏற்கனவே போட்டியிட்ட திருப்பரங்குன்றத்தை ஒதுக்கும் முடிவில் தி.மு.க., உள்ளது. ஆனால் அக்கட்சி மேற்கு தொகுதியை குறி வைக்கிறது. அதற்கு வாய்ப்பில்லை.

மதுரை கிழக்கில் அமைச்சர் மூர்த்தி தவிர யாரும் விருப்ப மனு அளிக்காததால் அவர் மீண்டும் போட்டியிடுவது உறுதி.

மேற்கு தொகுதியில் தி.மு.க., வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி, இளைஞரணி மாநில துணை செயலாளர் ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் தனச்செல்வம் களத்தில் உள்ளனர். அமைச்சர் மூர்த்தி ஆதரவு உள்ளவருக்கு வாய்ப்பு அதிகம்.

மத்திய தொகுதியில் அமைச்சர் தியாகராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். ஆனாலும் இத்தொகுதியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராம், நகர் துணை செயலாளர் சின்னம்மாள், அவைத் தலைவர் ஒச்சுபாலு, மாநகராட்சி கணக்கு குழுத் தலைவர் நுார்ஜஹான் என பலர் மனுக்கள் அளித்துள்ளனர். அமைச்சருக்கு வாய்ப்பு அதிகம்.

வடக்கு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ., தளபதியுடன், முன்னாள் எம்.எல்.ஏ., வேலுச்சாமி, முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம், அவரது மகன் பொன்சேது, முன்னாள் மேயர் குழந்தைவேலு என ஒரு பட்டாளமே களத்தில் உள்ளது. இதுதவிர இத்தொகுதியை காங்.,கும் குறிவைத்துள்ளது. தளபதியை பரிசீலிக்க வாய்ப்புள்ளது.

தெற்கு தொகுதி மீண்டும் ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்படுகிறது. பூமிநாதன் தி.மு.க., சின்னத்தில் போட்டியிட உள்ளார். இருப்பினும் தி.மு.க.,வில் முன்னாள் மண்டல தலைவர் முகேஷ் சர்மா உள்ளிட்டோரும் இத்தொகுதிக்கு மோதுகின்றனர்.

உசிலம்பட்டியில் தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், நகர் செயலாளர் தங்கப்பாண்டியன், சேடபட்டி ஒன்றிய செயலாளர் ஜெயசந்திரன் களத்தில் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான சிட்டிங் எம்.எல்.ஏ., அய்யப்பனும் போட்டியிட காய் நகர்த்துகிறார்.

இதனாலேயே இத்தொகுதியை குறிவைத்துள்ள இளமகிழன் திருப்பரங்குன்றம் தொகுதியிலும் விருப்ப மனு அளித்துள்ளார். இங்கு தி.மு.க., தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கிருத்திகா உள்ளிட்டோரும் களத்தில் உள்ளனர்.

போட்டி இருந்தாலும் திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், சோழவந்தானில் மீண்டும் வெங்கடேசன் எம்.எல்.ஏ.,வுக்கு அதிகம் வாய்ப்புள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us