/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கேரள மருத்துவக்கழிவுகளை தமிழகத்தில் தடுக்காதது ஏன் அ.தி.மு.க., கேள்வி
/
கேரள மருத்துவக்கழிவுகளை தமிழகத்தில் தடுக்காதது ஏன் அ.தி.மு.க., கேள்வி
கேரள மருத்துவக்கழிவுகளை தமிழகத்தில் தடுக்காதது ஏன் அ.தி.மு.க., கேள்வி
கேரள மருத்துவக்கழிவுகளை தமிழகத்தில் தடுக்காதது ஏன் அ.தி.மு.க., கேள்வி
ADDED : டிச 22, 2024 07:29 AM
மதுரை : ''கேரளாவின் மருத்துவக் கழிவுகளை கர்நாடகா மாநிலம் எல்லையில் தடுத்தது போல தமிழக எல்லையில் தி.மு.க., அரசு தடுக்க வில்ைல. போர்க்கால அடிப்படையில் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்காமல் அமைச்சர் சுப்பிரமணியம் குறட்டைவிட்டு துாங்குகிறார்'' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம்சாட்டினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: தி.மு.க., எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது எல்லாம் காற்றில் மாசு அதிகரித்து வருகிறது.
காவிரி டெல்டா பகுதியில் மக்களை பாதிக்கும் மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தார்கள். அதை பொதுச்செயலாளர் பழனிசாமி தடுத்து அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உருவாக்கினார்.
கேரளா அருகே உள்ள கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. பலமுறை இதை கண்டுபிடித்து அப்பகுதி மக்கள் எச்சரித்து அனுப்பினர். அப்போது கூட தி.மு.க., அரசு இதைக் கண்டு கொள்ளவில்லை.
பொள்ளாச்சி பகுதியில் கேரளாவில் இருந்து கோழி கழிவுகளும் கொட்டப்படுகின்றன. கடந்த மாதம் கர்நாடக மாநிலத்தில் உள்ள குண்ட்லுபேட் உள்ள முல்ஹோப் சோதனைச் சாவடியில் கேரளாவில் இருந்து ஆறு லாரிகளில் கொண்டு வரப்பட்ட பல்வேறு கழிவுகளை கேரளாவிற்கே திருப்பி அனுப்பினர்.
கேரளாவில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தில் இருந்தும் மருத்துவக் கழிவுகளும் அதே போன்று அங்கே உள்ள நட்சத்திர ஓட்டலில் உள்ள கழிவுகளை எல்லாம் திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லுார், பழுவூர் உள்ளிட்ட 10 இடங்களில் கொட்டப்பட்டுள்ளன.
ஏற்கனவே அந்த மருத்துவக் கழிவில் தொற்றுநோய் பரப்பும் கடுமையான மருத்துவ கழிவுகள் இருப்பதால் இதன் மூலம் மக்களுக்கு காற்றின் மூலம் தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது. மேலும் மருத்துவ கழிவுகளால் நிலம் மாசுபாடு மட்டுமல்ல நீரும் மாசுபடும் சூழ்நிலை உள்ளது.
ஆகவே மக்களுக்கு தொற்று நோய் வராமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்காமல் அமைச்சர் சுப்பிரமணியம் குறட்டை விட்டு துாங்குகிறார். இவ்வாறு கூறினார்.