/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெல் கொள்முதல் மையங்களில் தினமும் ஆயிரம் மூடை நெல் எடையிடாதது ஏன்: விவசாயிகள் கேள்வி
/
நெல் கொள்முதல் மையங்களில் தினமும் ஆயிரம் மூடை நெல் எடையிடாதது ஏன்: விவசாயிகள் கேள்வி
நெல் கொள்முதல் மையங்களில் தினமும் ஆயிரம் மூடை நெல் எடையிடாதது ஏன்: விவசாயிகள் கேள்வி
நெல் கொள்முதல் மையங்களில் தினமும் ஆயிரம் மூடை நெல் எடையிடாதது ஏன்: விவசாயிகள் கேள்வி
UPDATED : அக் 28, 2025 04:42 AM
ADDED : அக் 28, 2025 03:54 AM

மதுரை: நெல் கொள்முதல் மையங்களில் தினமும் ஆயிரம் மூடை அளவிற்கு நெல்லை எடையிட வேண்டும் என்றாலும் அதிகபட்சமாக 400 மூடைகளை மட்டுமே எடையிடுவதாக விவ சாயிகள் புகார் தெரி வித்தனர்.
மதுரையில் குறுவை சாகுபடிக்காக 41 நெல் கொள்முதல் மையங்களை திறக்க கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவிட்ட நிலையில் 10க்கும் குறைவான மையங்களே செயல் படுகின்றன.
தற்போது நெல்லை கொள்முதல் செய்யும் மையங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து விவசாயிகள் கூறிய தாவது:
கமிஷன் தந்தால் விற்க முடிகிறது நல்லு, தனிச்சியம்: 10 ஏக்கரில் நெல் விவசாயம் செய்துள்ளேன். தனிச்சியம் நெல்கொள் மையத்தில் நெல்லை துாற்றுவதற்குரிய கருவிகள் 2 நாட்களுக்கு முன்பாக கொண்டு வரப்பட்டது. எடையிடும் இயந்திரம், எடையிடுவதற்கு ஆட்கள், சுமை துாக்கும் தொழிலாளர்கள் வரவில்லை.
விவசாயிகள் 500 மூடை அளவிற்கு நெல்லை கொட்டி 5 நாட்களாகிறது. இந்த நெல்லை எடையிட்டு லாரிகளில் ஏற்றினால் தான் மற்ற விவசாயி களின் நெல்லை அறுவடை செய்து மையத்திற்கு கொண்டு வரமுடியும்.
தனிச்சியத்தில் மட்டும் ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். அக். 1 முதல் மையம் செயல்படும் என்று அதி காரிகள் தெரிவித்தனர். எப்போது திறப்பார்கள் என தெரியவில்லை. மூடைக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை கமிஷன் தந்தால் தான் நெல்லை விற்க முடிகிறது.
தாமதமின்றி எடை ஜமுனா, வடுகப்பட்டி: ஒன்றரை ஏக்கரில் நெல் அறுத்து வடுகப்பட்டி கொள்முதல் மையம் முன்பாக கொட்டி வைத்து 10 நாட்களாகிறது. நெல் குவியல் சூடேறி தரம் குறைந்தால் விற்பனைக்கு எடுக்க மாட்டார்கள்.
அதனால் ஒருநாள் விட்டு ஒருநாள் வீதம் 3 மணி நேரம் நெல்லை கிளறிவிட வேண்டும். இதற்கு பெண் தொழி லாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.300 வீதம் 2 பேருக்கு செலவு செய்கிறோம். தாமதமின்றி நெல்லை எடையிட்டால் பணநஷ்டம் குறையும்.
ரூ. 25 ஆயிரம் செலவு சித்ரா, ஆண்டிபட்டி: தீபாவளிக்கு முன்பே ஆண்டிபட்டி மையம் திறக்கப்படும் என தெரிவித்ததால் எட்டு ஏக்கரில் நெல்லை அறுத்து மையத்தில் கொட்டி 20 நாட்களாகிறது.
நெல் சூடேறி விடும் என்பதால் அவற்றை கிளறு வதற்கு ஒருநாளைக்கு ஒருவருக்கு ரூ.1000 வீதம் நான்கு பேருக்கு ரூ.4000 கூலி கொடுக்கிறேன். இதுவரை ரூ.25ஆயிரம் செலவு செய்துள்ளேன். இன்னும் நெல்லை எடையிடவில்லை.
1000 மூடைகள் கணக்கு எழிலரசன், கட்டக்குளம்: 5 ஏக்கரில் நெல் அறுவடை செய்துள்ளேன். தீபா வளிக்கு முன்பே நெல்லை அறுவடை செய்து தற்போது வரை எடையிடுவதற்காக காத்திருக்கிறோம். மழையால் நெல் குவி யலுக்குள் வெப்பம் அதிகரித்து 22 முதல் 24 சதவீத ஈரப்பதமாக உள்ளது. இதனால் மைய அலு வலர்கள் நெல்லை அளக்காமல் காயவிடவேண்டும் என்கின்றனர்.
காயவைக்க இடவசதியின்றி எங்களுக்குள்ளேயே சண்டையிடுகிறோம். கட்டக்குளத்தில் மட்டும் 800 ஏக்கரில் சாகுபடி செய்துள்ள னர். மையம் திறந்தாலும் தினமும் ஆயிரம் மூடை எடையிட வேண்டும். மழையை காரணம் காட்டி தினமும் 400 மூடைகள் தான் வெளியே செல்கிறது.
இதற்கு மாவட்ட நிர் வாகம் தீர்வு காண வேண்டும் என்றனர்.

