/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'அமைச்சர் நடத்திய பி.எல்.ஓ., கூட்டத்தில் கலெக்டர், கமிஷனர் கலந்து கொண்டது ஏன்'

ADDED : நவ 19, 2025 05:20 AM
மதுரை: மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு தொகுதிகளில் அ.தி.மு.க., பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது.
அவர் பேசியதாவது:
எஸ்.ஐ.ஆர்., பி.எல்.ஓ., பணிகளில் அலுவலர்கள் சரியாக நியமிக்கப்படவில்லை. காலை உணவு திட்டத்தில் உள்ளவர்கள், சுய உதவி குழுக்களை நியமித்துள்ளனர். இவர்களுக்கு சரியாக பயிற்சி அளிக்கப்படாததால், அதை தி.மு.க., சாதகமாக பயன்படுத்துகிறது.அலுவலர்கள் தவறு செய்தால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் அ.தி.மு.க., வினர் முறையிட வேண்டும்.
எஸ்.ஐ.ஆர்., பணியை தி.மு.க., எதிர்க்கிறது. ஆனால் தற்போது அமைச்சர் மூர்த்தி கிழக்கு தொகுதியில் தி.மு.க., பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில், தேர்தல் அதிகாரிகளான கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் பங்கேற்று உள்ளனர்.
இது நிர்வாக சீர்கேட்டிற்கு சான்று; தவறான முன் உதாரணம்; அதில் அவர்கள் பங்கேற்றது தவறு இல்லை என்றால் எங்களின் அடுத்த பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு கலெக்டருக்கு அழைப்பு விடுவோம். அதில் பங்கேற்க வேண்டும் என்றார்.
மேலூர் எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்ராஜ்சத்யன் பங்கேற்றனர்.