ADDED : நவ 19, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை எம்.கே.புரத்தை சேர்ந்தவர் முத்துமணி போஸ், 28. ராமநாதபுரத்தில் இருந்து நீதிமன்ற வாய்தாவிற்காக மதுரை வந்தார். நேற்று இரவு எம். கே. புரம் பகுதி மதுபான கடையில் மது அருந்தும்போது அங்கு உள்ளவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட, தகராறாக மாறியது.
அப்போது முத்துமணி போஸ் ஒருவரை தாக்கினார். ஆத்திரமுற்ற அந்த நபர், தனது நண்பர்களை அழைத்து வந்து முத்துமணியை ஓட ஓட விரட்டி ஆயுதங்களால் தாக்கியும் தலையில் கல்லை போட்டும் கொலை செய்தனர்.ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
முத்துமணி போஸ் பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் கூட்டாளி. இவரின் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

