ADDED : டிச 28, 2025 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு: பாலமேடு அருகே சத்திர வெள்ளாளப்பட்டி கிராமத்தை அடுத்த மதுரை வனச்சரக பகுதியை ஒட்டிய ஊமையன் கரடு, வழுக்குப்பாறை மலை குட்டு தொடர்ச்சி உள்ளது.
இந்த கரட்டு மலைப்பகுதியில் நேற்று இரவு காட்டுத்தீ பற்றி மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது.
வனத்துறையினர், அலங்காநல்லுார் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுடன் இணைந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
அப்பகுதியில் இருந்த எலுமிச்சை புல், கோரை செடி, கொடிகள் கருகின. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

