/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எரிந்த வனப்பகுதியால் வனவிலங்குகள் அவதி
/
எரிந்த வனப்பகுதியால் வனவிலங்குகள் அவதி
ADDED : அக் 12, 2024 04:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சிவரக்கோட்டை முதல் கள்ளிக்குடி வரை இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி போல் மரம் செடி கொடிகள் வளர்ந்துள்ளன.
இந்த வனப்பகுதிக்குள் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன. ரோட்டில் செல்லும் நபர்கள் வைக்கும் தீயால் இந்த வனப்பகுதி எரிந்து சாம்பலாகி உள்ளது. இதனால் வனவிலங்குகள் போதிய உணவு இன்றியும், குடிக்க தண்ணீர் இன்றியும் வசிப்பதற்குரிய வாழ்வாதாரத்தை இழந்தும் உள்ளன. எனவே வனத்துறை தீவிரமாக கண்காணித்து தீ வைக்கும் நபர்களை கைது செய்ய வேண்டும். வனவிலங்குகளை காப்பதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.