ADDED : ஆக 15, 2025 03:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: கருப்பட்டி ஊராட்சி பொம்மன்பட்டியில் சமுதாயக்கூடம் அமைக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
பிச்சைமுத்து: இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஏராளமான மக்கள் வசிக்கிறோம். இங்குள்ளோர் இல்ல விழாக்கள், சமுதாயக் கூட்டங்களை நடத்த சமுதாயக்கூடம் இல்லை. வீதிகளில் பந்தல் அமைத்து நடத்த வேண்டிய நிலை உள்ளதால் போக்குவரத்து இடையூறு உள்ளது. மழை, வெயில் காலங்களில் திருமணம், காதணி விழாக்களை நடத்துவதற்கு சிரமமாக உள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை என்றார்.