/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி திட்டப்பணிகளுக்கு சிறப்பு பொறியாளர்கள் குழு: சென்னை போல் மதுரைக்கு வருமா
/
மாநகராட்சி திட்டப்பணிகளுக்கு சிறப்பு பொறியாளர்கள் குழு: சென்னை போல் மதுரைக்கு வருமா
மாநகராட்சி திட்டப்பணிகளுக்கு சிறப்பு பொறியாளர்கள் குழு: சென்னை போல் மதுரைக்கு வருமா
மாநகராட்சி திட்டப்பணிகளுக்கு சிறப்பு பொறியாளர்கள் குழு: சென்னை போல் மதுரைக்கு வருமா
ADDED : நவ 12, 2025 12:50 AM

மதுரை: மதுரை மாநகராட்சியில் குடிநீர், பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளுக்கு உதவி செயற்பொறியாளர் தலைமையில் சிறப்பு பொறியாளர் குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னையில் வார்டுகள் வாரியாக பொறியாளர்கள் நியமிக்கப்பட்டாலும் குடிநீர், பாதாளச் சாக்கடை, ரோடு உள்ளிட்ட பணிகளுக்கு பிரத்யேக பொறியாளர்கள் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையை அடுத்து 100 வார்டுகளை கொண்ட பெரிய மாநகராட்சியாக மதுரை உள்ளது.
இங்கு மக்களுக்கு வழக்கமாக வைகை, காவிரி, முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் தினசரி குடிநீர் சப்ளையை கண்காணிக்க வேண்டியுள்ளது. இது தவிர்த்து புதிய பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள், பராமரிப்பு, ரோடுகள் பணி, பராமரிப்பு, வாட்ஸ்ஆப் புகார் மீதான நடவடிக்கைகள், முகாம்கள் என பல்வேறு பணிகளை தற்போது வார்டு பொறியாளர்கள் கவனிக்கின்றனர்.
சிறப்பு குழுக்கள் அதேநேரம் புதிய குடிநீர், பாதாளச் சாக்கடை, ரோடுகள் பணிகளையும் அவர்கள் கூடுதலாக கவனிக்க வேண்டியுள்ளது. இதனால் பணிகளில் வேகம், தரம் கேள்விக்குறியாகிறது. டிசம்பரில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள முல்லைப் பெரியாறு இரண்டாவது கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளை நுாறு சதவீதம் முடிக்கவும் மாநகராட்சிக்கு சவாலாக உள்ள நிலையில் இதுபோன்ற சிறப்பு பொறியாளர் குழுக்களை ஏற்படுத்த மாநகராட்சி ஆலோசிக்கலாம்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: திட்டப் பணிகளுக்கு பிரத்யேக பொறியாளர் குழு அமைக்கும் நடைமுறை மதுரைக்கு மிக தேவை. தற்போது 54 வார்டுகளில் புதிய குடிநீர் திட்டங்கள், விரிவாக்கம் செய்யப்பட்ட 28 வார்டுகளில் புதிய பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் நடக்கின்றன. இவற்றை ரெகுலர் வார்டு பணிகளை கவனிக்கும் பொறியாளர்கள் தான் மேற்கொள்கின்றனர். இதனால் குடிநீர் வினியோகம், பாதாளச் சாக்கடை பராமரிப்பு தொடர்பான புகார்கள் அதிகம் வருகின்றன.
இதை சரிசெய்யும் வகையில் குடிநீர், பாதாளச் சாக்கடை, ரோடு பணிகளுக்கான சிறப்பு பொறியாளர் குழுவை ஏற்படுத்தலாம். தற்போது மாநகராட்சியில் 69 ரெகுலர் பொறியாளர், கூடுதல் பொறுப்பு வகிக்கும் பொறியாளர்கள் உள்ளனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் அரசாணைப்படி (852) மதுரை மாநகராட்சிக்கு மொத்தம் 40 பொறியாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பொறியாளர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டு, இதுபோன்ற பிரத்யேக பொறியாளர் குழுக்களை ஏற்படுத்த மாநகராட்சி கமிஷனர் சித்ரா நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கலாம். இதன்மூலம் குடிநீர், பாதாளச் சாக்கடை தொடர்பான பணிகளில் வேகம் அதிகரிக்கும் என்றார்.

