/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அடிப்படை பணியாளர்களும் விருது பெற கிடைக்குமா கருணைப் பார்வை ; சுதந்திர, குடியரசு விழாவில் வழங்க நடவடிக்கை அவசியம்

ADDED : ஆக 12, 2025 05:26 AM

மதுரை : சுதந்திர தினம், குடியரசு தின நாட்களில் சிறப்பாக பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு விருது வழங்க தகுதிகளை வரையறுத்தும், கடைநிலை ஊழியர்களுக்கும் விருது வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் விழாக்கள் விமரிசையாக நடைபெறும் போலீஸ் அணிவகுப்பு, பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், சிறப்பாக பணியாற்றியோருக்கு விருது என மாவட்ட நிர்வாகம் சார்பில் வண்ணமயமான நிகழ்ச்சிகள் களைகட்டும்.
இதில் தியாகிகள், சிறப்பாக பணியாற்றும் அரசு அலுவலர்கள், வீரதீர செயல்புரிந்தோர் என பலருக்கும் சால்வை, பாராட்டுச் சான்று, கேடயம் என மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும். ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சியில் அந்தந்த துறை உயரதிகாரிகளின் 'கருணைப் பார்வை' பெற்றவர்களே விருதுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர் என்ற புகார் உள்ளது. கடந்த ஆண்டுகளில் ஒருமுறை விருது பெற்ற அலுவலர்கள் சிலர் மீண்டும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
அத்துடன் ஒவ்வொரு துறையிலும் அலுவலர்கள் பலர் விருது பெறுகையில், அடிப்படை பணியாளர்களான துப்புரவு பணியாளர், இரவுக் காவலர், அலுவலக உதவியாளர், கிராம உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், தட்டச்சு சுருக்கெழுத்தர், இளநிலை உதவியாளர் என கீழ்நிலை பணியாளர்களுக்கும் விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜெயகணேஷ், செயலாளர் முத்துராஜா, பொருளாளர் சேகர் கூறுகையில், ''மாவட்ட நிர்வாகத்தின் நற்சான்றிதழ் உயரதிகாரிகளுக்கு நெருக்கமானவர்களுக்கே கிடைக்கிறது. இதைத் தவிர்க்க இவ்விருது பெற சில வரைமுறைகளை தகுதியாக அறிவித்து அவற்றை பூர்த்தி செய்வோருக்கு வழங்குவதே சரியானதாக இருக்கும். மேலும் அனைத்துத் துறைகளிலும் அடிப்படை பணியாளர்களையும் தேர்வு செய்து விருது வழங்கினால் அவர்களும் ஊக்கம் பெறுவதுடன், பணித்திறனும் மேம்படும். இதனை வலியுறுத்தி கலெக்டரிடம் மனுவாக வழங்கியுள்ளோம்'' என்றனர்.